என்றும் உயர்ந்ததே....
அடிமைகளாய் எம் சமூகம் அழைக்கப்பட்டிருந்தாலும், அது தன் உழைப்பால் என்றும் உயர்ந்ததே....
லயின் குடியிருப்புக்களில் பாரிய கஷ்டங்களை சுமந்தாலும், எம்மவர்களின் ஒற்றுமை என்றும் உயர்ந்ததே....
ஏமாற்றுக்காரர்களின் பாசாங்கில் இலகுவில் சிக்குண்டாலும், எம்மவர்களின் இளகிய மனம் என்றும் உயர்ந்ததே....
இரவு, பகல், பசி, பட்டினி பாராமல் உழைத்தாலும், எம்மவர்களின் குறைவில்லா மகிழ்ச்சி என்றும் உயர்ந்ததே...
வறுமை பிடியில் சிக்குண்டு பதைபதைத்தாலும், எம்மவர்களுக்கு பிள்ளைகளின் எதிர்கால கல்வி என்றும் உயர்ந்ததே....
வெள்ளம், மண்சரிவு என இயற்கை இன்னல்களை எதிர்கொண்டாலும், உயர உயர எழில் கொஞ்சும் மலைத்தொடர்கள் எம் மலையகத்திற்கு என்றும் உயர்ந்ததே....⛰️⛰️⛰️
செல்வராஜ் லோசனி
பட்டதாரி

கருத்துகள்
கருத்துரையிடுக