இடுகைகள்

உயர்தர பாடத்தெரிவில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களும், பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும்

படம்
கல்வி என்பது எமது வாழ்வில் முக்கியமான ஒன்று. எனவேதான் கல்வியினை கண்ணிற்கு உவமிக்கிறார் திருவள்ளுவர். தற்போதைய தொழிநுட்ப உலகில் தெரிவு (உhழiஉந) என்பது அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. தெரிவினைப் பொருத்தே எமது எதிர்காலமும் அமைகின்றது. நமது வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் அளவிற்கு தெரிவு என்பது சக்தி வாய்ந்தது. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை தெரிவு என்பது எமது வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன். பெற்றோர் தமது குழந்தைகளுக்கு சொத்துக்கள், வசதிகளை வழங்குவதை விட சிறந்த கல்வியினை வழங்க வேண்டும். கல்விச் செல்வம் மட்டுமே அழியாச் செல்வம் என்பது யாவரும் அறிந்த உண்மை. தற்கால மாணவர்கள் இணைய வசதியின் ஊடாக இலகுவாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது. அவர்களின் சிந்திக்கும் திறன், பேச்சுத் திறன் என்பன தற்போது அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே, அவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி தொடர்பான தெரிவுகளும் தவறான விதத்தில் அமையாத வகையில் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.   மாணவர்கள் கல்வி பொது தராதர சாதாரண தரம் வரை கல்வி பயின்று உயர்தரம் செல்ல வேண்ட...
படம்
  என்றும் உயர்ந்ததே.... அடிமைகளாய் எம் சமூகம் அழைக்கப்பட்டிருந்தாலும்,    அது தன் உழைப்பால் என்றும் உயர்ந்ததே.... லயின் குடியிருப்புக்களில் பாரிய கஷ்டங்களை சுமந்தாலும், எம்மவர்களின் ஒற்றுமை என்றும் உயர்ந்ததே.... ஏமாற்றுக்காரர்களின் பாசாங்கில் இலகுவில் சிக்குண்டாலும்,  எம்மவர்களின் இளகிய மனம் என்றும் உயர்ந்ததே.... இரவு, பகல், பசி, பட்டினி பாராமல் உழைத்தாலும்,  எம்மவர்களின் குறைவில்லா மகிழ்ச்சி என்றும் உயர்ந்ததே... வறுமை பிடியில் சிக்குண்டு பதைபதைத்தாலும்,  எம்மவர்களுக்கு பிள்ளைகளின் எதிர்கால கல்வி என்றும் உயர்ந்ததே.... வெள்ளம், மண்சரிவு என இயற்கை இன்னல்களை எதிர்கொண்டாலும்,  உயர உயர எழில் கொஞ்சும் மலைத்தொடர்கள் எம் மலையகத்திற்கு என்றும் உயர்ந்ததே.... ⛰️⛰️⛰️ செல்வராஜ் லோசனி பட்டதாரி
  கலைந்துப் போன கனவுகள்.... 😔 பச்சைக் கம்பலத்துக்கு மத்தியிலே பச்சிளம் குழந்தை ஒன்று பிறக்க... பெட்டை பிள்ளையொன்று  வம்சம் காக்க பிறந்ததென்று பரம்பரையே வாழ்த்துப் பாட... இருந்தும் அந்த பெட்டை பிள்ளையின்  கனவுதான் கலைந்துப் போனதென்ன...??? தேயிலைத் தோட்டத்துக்கு நடுவே பூ மரமாய் மலர்ந்த மொட்டொன்று... கயவர்களின் கைப்பட்டு கசங்கி போக... ஐந்தாறு மாதத்தில் வயிறு குமட்ட... இறுதியில் கருகலைத்தல் தான் கலைந்துப் போன  கனவுகளின் உறைவிடமோ...?            மா.பிரஷாந்திகா...✍️✍️✍️          கிழக்குப் பல்கலைகழகம்
படம்
 #தேயிலைக்கு_நிறம்_தந்தவர்கள் நின்ற நிலை மாறி வந்தவொரு கூட்டம் சொந்தமதை நீங்கி துன்பமதில் திளைக்க குன்றினிடை கடைந்து குழிப்பறித்ததாலே பஞ்சமதை நீக்கிப் பாவக்கதைப் புனைந்தோம்...! எண்ணூறில் தொடங்கிய ஏழ்மை வரலாறு தன்னுயிரை மாய்த்து தவம் செய்ததாலே கண்ணீரின் காருண்யம் கதைப்பாட்டாக அந்நியனும் இங்கே அரசாள்கின்றானோ...! வான் பிளந்த மேகம் தன்னுடல் கரைக்க ஊன் நிறைந்த சடமிங்கே உருக்குலைந்து போக பல்முளைத்தக் கற்றாளை பாவியுடல் கிழிக்க நாளைவரும் விதியெண்ணி நகைத்தல் பயனுண்டோ ...! மானமது போர்த்தி மடமையது நீங்க கூனி நின்ற காலமது கூரைவழி போக தென்னாட்டு ராவணன் யாம் தேடிநிதம் சொல்வோம் நாம் தான் தேயிலைக்கே நிறம் தந்தவர்கள்...! ச.அரவிந்த் பிரஷாந்த்  மொரட்டுவ பல்கலைகழகம்

எமது ஒன்றிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்ட போது.... (2019.12.28)

படம்
 

Our Logo

படம்