#தேயிலைக்கு_நிறம்_தந்தவர்கள்
நின்ற நிலை மாறி வந்தவொரு கூட்டம்
சொந்தமதை நீங்கி துன்பமதில் திளைக்க
குன்றினிடை கடைந்து குழிப்பறித்ததாலே
பஞ்சமதை நீக்கிப் பாவக்கதைப் புனைந்தோம்...!
எண்ணூறில் தொடங்கிய ஏழ்மை வரலாறு
தன்னுயிரை மாய்த்து தவம் செய்ததாலே
கண்ணீரின் காருண்யம் கதைப்பாட்டாக
அந்நியனும் இங்கே அரசாள்கின்றானோ...!
வான் பிளந்த மேகம் தன்னுடல் கரைக்க
ஊன் நிறைந்த சடமிங்கே உருக்குலைந்து போக
பல்முளைத்தக் கற்றாளை பாவியுடல் கிழிக்க
நாளைவரும் விதியெண்ணி நகைத்தல் பயனுண்டோ ...!
மானமது போர்த்தி மடமையது நீங்க
கூனி நின்ற காலமது கூரைவழி போக
தென்னாட்டு ராவணன் யாம் தேடிநிதம் சொல்வோம்
நாம் தான் தேயிலைக்கே நிறம் தந்தவர்கள்...!
ச.அரவிந்த் பிரஷாந்த்
மொரட்டுவ பல்கலைகழகம்

கருத்துகள்
கருத்துரையிடுக