உயர்தர பாடத்தெரிவில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களும், பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும்

கல்வி என்பது எமது வாழ்வில் முக்கியமான ஒன்று. எனவேதான் கல்வியினை கண்ணிற்கு உவமிக்கிறார் திருவள்ளுவர். தற்போதைய தொழிநுட்ப உலகில் தெரிவு (உhழiஉந) என்பது அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. தெரிவினைப் பொருத்தே எமது எதிர்காலமும் அமைகின்றது. நமது வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் அளவிற்கு தெரிவு என்பது சக்தி வாய்ந்தது. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை தெரிவு என்பது எமது வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன். பெற்றோர் தமது குழந்தைகளுக்கு சொத்துக்கள், வசதிகளை வழங்குவதை விட சிறந்த கல்வியினை வழங்க வேண்டும். கல்விச் செல்வம் மட்டுமே அழியாச் செல்வம் என்பது யாவரும் அறிந்த உண்மை. தற்கால மாணவர்கள் இணைய வசதியின் ஊடாக இலகுவாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது. அவர்களின் சிந்திக்கும் திறன், பேச்சுத் திறன் என்பன தற்போது அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே, அவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி தொடர்பான தெரிவுகளும் தவறான விதத்தில் அமையாத வகையில் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

மாணவர்கள் கல்வி பொது தராதர சாதாரண தரம் வரை கல்வி பயின்று உயர்தரம் செல்ல வேண்டும் எனும் நோக்கில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்று விடுகின்றனர். இந்த இடத்தில் தான் அவர்களின் தெரிவு என்பது மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. மாணவர்கள் உயர்தரத்தில் தாம் கற்க விரும்பும் பிரிவினையும் பாடங்களையும் தெரிவு செய்யும் போது மிக அவதானமாக தெரிவு செய்ய வேண்டும். தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முதல் தெரிவு கல்வி பொது தராதர உயர்தர பிரிவு. இது ஒரு சாதாரணமான விடயம் எதையாவது தெரிவு செய்து சித்தியடைந்தால் போதும் என நினைப்போரும் எம் சமூகத்தில் இல்லாமல் இல்லை. அது முற்றிலும் தவறு. மாணவர்கள் தமது வாழ்க்கைக்காகவும் கல்வி கற்க வேண்டும். பெற்றோர் தமது குழந்தைகளுக்கு கல்வியினை வழங்கும் அதே சந்தர்ப்பத்தில் அவர்களுடைய தெரிவுகளுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும். தமது ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் அவர்கள் மீது திணிப்பதென்பது அவர்;களின் வாழ்வை கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

மாணவர்கள் தமது எதிர்காலம் பற்றியும் தமது குறிக்கோள் தொடர்பிலும் முழுமையான ஒரு திட்டமிடலை(Pடயnniபெ) கொண்டிருக்க வேண்டும். ஒழுங்குமுறையான திட்டமிடல் மற்றும் முயற்சி என்பவற்றின் மூலமே வெற்றி என்பதை தனதாக்கி கொள்ள முடியும். உயர்தர பிரிவில் கணிதம்இ உயிரியல் விஞ்ஞானம்இ கலைஇ வணிகம்இ உயிரியல் தொழிநுட்பம் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவற்றில் எப்பிரிவில் கற்பதுஇ எவ்வகையான பாடங்களை தெரிவு செய்வது என்பதில் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும். இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க மற்றும் வேதனைக்குறிய விடயம் கல்வி புகட்டும் சில ஆசிரியர்களும் தமது மாணவர்களை தவறான பாதைக்கு வழிகாட்டி விடுகின்றனர். தங்களது பாடத்தை அதிகளவு மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள் அவர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்குவதற்கு முன்வருவதில்லை. ஆசிரியப் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பதை புறந்தள்ளி பணத்தினை நோக்காக கொண்டு தமது தொழிலையே விலைபேசி விடுகின்றனர் சில ஆசிரியர்கள். தற்போதைய காலகட்டத்தில் அதிக வருவாயை ஈட்டக்கூடிய துறையாக கல்வித் துறை காணப்படுகின்றதென்பது நிதர்சன உண்மை. 
மாணவர்கள் உயர்தர பாடத்தெரிவின் போது பின்வரும் நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
  ⦿தன்னால் சிறந்த பெறுபேற்றினை எடுக்க கூடிய துறையினை தெரிவு செய்ய வேண்டும்.
 ⦿தான் தெரிவு செய்த துறையில் உள்ள பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களிடம் கற்ற மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனரா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    ⦿பெற்றோர் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும் ஆனால் முடிவெடுப்பது நாமாக இருக்க வேண்டும்.
    ⦿தனது குறிக்கோள் மீது முழு கவனமும் இருக்க வேண்டும். அதற்கான மன தைரியமும் முயற்சியும் பயிற்சியும் இருக்க வேண்டும்.
     ⦿பெறுமைக்காக பாடத்தெரிவுகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இவற்றை கருத்திற் கொண்டு தமது தெரிவுகள் இருக்குமானால் எதிர்காலம் சிறப்பாக அமையும். இதனடிப்படையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் போது அவர்களுடைய கல்வி மேலும் சிறப்பாக அமையும். கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தை புகட்டுவதும் இன்றியமையா விடயமாகும். எனவேஇ மாணவர்களின் தெரிவு தமது எதிர்காலத்தை கருத்திற் கொண்டதாக அமைதல் வேண்டும். இதற்கான முறையான ஒத்துழைப்பினை பெற்றோர்களும் ஆசிரியர்களும் வழங்குவது இன்றியமையாக் கடமையாகும்.

 “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவருக்கு
                                                    மாடல்ல மற்றை யவை” 

குமார் சுபாசினி(B.A,MA)
கிழக்கு பல்கலைக்கழகம்
இலங்கை

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்