கலைந்துப் போன கனவுகள்....😔


பச்சைக் கம்பலத்துக்கு மத்தியிலே

பச்சிளம் குழந்தை ஒன்று பிறக்க...

பெட்டை பிள்ளையொன்று 

வம்சம் காக்க பிறந்ததென்று

பரம்பரையே வாழ்த்துப் பாட...

இருந்தும் அந்த பெட்டை பிள்ளையின் 

கனவுதான் கலைந்துப் போனதென்ன...???


தேயிலைத் தோட்டத்துக்கு நடுவே

பூ மரமாய் மலர்ந்த மொட்டொன்று...

கயவர்களின் கைப்பட்டு

கசங்கி போக...

ஐந்தாறு மாதத்தில் வயிறு குமட்ட...

இறுதியில் கருகலைத்தல் தான் கலைந்துப் போன  கனவுகளின் உறைவிடமோ...?  


         மா.பிரஷாந்திகா...✍️✍️✍️

         கிழக்குப் பல்கலைகழகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உயர்தர பாடத்தெரிவில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களும், பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும்